விவசாயிகளிடம் நெல் அளக்கும் தராசுகளில் மோசடி: அரிசி ஆலை உரிமையாளர்சங்க தலைவர் குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்ய வரும் வெளி மாவட்ட நெல் கொள்வனவாளர்கள் மற்றும் உள்ளூர் நெல் கொள்வனவாளர்கள் நிறுவை தராசுகளில் பாரிய மோசடி மேற்கொண்டு விவசாயிகளிடம் நெல்லை கொள்ளளவு செய்து வருகின்றனர் என வவுனியா மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் சி. விவேகானந்தன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது அறுவடை ஆரம்பித்து உள்ள நிலையில் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்யவரும்  கொள்வனவாளர்கள்  நிறுவை தராசுகளில் மோசடி செய்து விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்கின்றனர்.

தராசில் இருக்கும் மேல்பகுதியை மாற்றி வைப்பதன் ஊடாக இரண்டு மூடைகளில் சுமார் 15 கிலோ வீதம் விவசாயிகள் நட்டமடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன எனச் சுட்டிக் காட்டிய அவர், நியாயமாகக் கொள்வனவு செய்பவர்களை விட 100, 200 ரூபா பணம் அதிகமாக  கிடைக்கின்றது என்ற காரணத்தால் விவசாயிகள் அவ்வாறான கொள்வனவாளர்களிடம ;நெல்லைக் கொடுத்து பல ஆயிரம் ரூபா நட்டம் அடைந்து ஏமாறுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

எனவே விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யும் போது மிகவும் அவதானமாக செயல்படுமாறும் அவர் கேட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.