வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் பல்வேறு திறன்களை விருத்தி செய்ய வெளிக்கள நடைமுறைப் பயிற்சி பட்டறை அண்மையில் குக்குலேகங்க லயா லெஷர் ஹோட்டலில்  நடைபெற்றது.
பணியக ஊழியர்களின் அறிவு மற்றும் திறனை மேம்படுத்த பணியகத்தின் நிர்வாக மற்றும் மனிதவள முகாமைத்துத்துவ பிரிவால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திட்டம் ஏனைய பயிற்சித் திட்டங்களை விட தனித்துவமிக்கதாகும்.

அலுவலகப் பணிகளைத் தவிர பல நடைமுறைச் செயற்பாடுகளை உள்ளடக்கிய இந்தத் திட்டம், தலைமைப் பயிற்சி, தலைமைத்துவ தீர்மானம் எடுக்கும் திறன் மற்றும் கூட்டுப் பொறுப்பின் மூலம்  நிறுவனத்தையும் வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வது போன்ற பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ளத் தேவையான புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும்  வாய்ப்பை அலுவலக பணியாளர்களுக்கு  வழங்கியது.

பயனாளிகளுக்கு தரமான சேவையை வழங்க பணியகத்தின் நிர்வாக மற்றும் மனிதவள முகாமைத்துத்துவ பிரிவு ஆண்டுதோறும் இவ்வாறான பயிற்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது.

வெளிக்களப் பயிற்சிப் பட்டறை திட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் 80 உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன், எதிர்வரும் சில வாரங்களில் ஏனைய ஊழியர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.