அரசின் இருப்பை பாதுகாக்கவே நிகழ்நிலை காப்புச் சட்டமூலமாம்! ரவூப் ஹக்கீம் சபையில் எடுத்துரைப்பு

சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களைத் தடுத்து அரசாங்கத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளும் துரும்பாகவே நிகழ்நிலை காப்புச்சட்டமூலத்தை அரசாங்கம் பயன்படுத்த முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உத்ததேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

சமூகவலைத ;தளங்களில் சிறுவர்கள் மற்றும்  பெண்கள் தொடர்பாக வெளியிடப்படும் மோசமான விடயங்களில் இருந்து மக்களைப்; பாதுகாப்பதற்கே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதாக அரசாஙகம் தெரிவிக்கிறது.

ஆனால் இதனைக் காரணம் காட்டிக்கொண்டு அரசாங்கத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள இந்த சட்டமூலத்தை அரசாங்கம் துரும்பாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகவே எமக்குத் தெரிகிறது.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பாக வெளியிடப்படும் மோசமான விடயங்களைத் தடுப்பதற்கு இந்த சட்டமூலத்தைக் கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் சட்டமூலத்தில் உள்ள 57 பிரிவுகளில்  2 பிரிவுகளில் மாத்திரமே பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏனைய அனைத்து விடயங்களும் வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் வலைத்தளங்கள் ஊடாகத் தகவல் பரிமாற்றிக்கொள்ளும் மத்தியில், அரசியல் நோக்கில் தங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வரும்போது அதனையும் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீண்ட கலந்துரையாடல் சென்றது.

அத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் இன்று மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறது. அதனால் அரசாங்கத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எழும் விமர்சனங்களை அடக்குவதற்கான நடவடிக்கையாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம். இது ஜனநாயக விரோத செயலாகும்.

அதேபோன்று அரசாங்கம் மக்கள் போராட்டத்துக்கு பயப்படுகிறது. அதனால் அவசரமாக இந்த சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருகிறது. இந்த சட்டமூலம் ஊடாக அரசாங்கம் பாதுகாக்கப்படுகிறது. அதனால்தான் நாங்கள் இதனை எதிர்க்கிறோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.