பௌத்ததேரரின் கொலைக்கு பயன்படுத்திய சொகுசுகார் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்பு!

சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கம்பஹா, ஹேனேகம பிரதேசத்திலுள்ள விகாரையின் கலபாலுவாவே தம்மரத்ன தேரர் (வயது – 45) உயிழந்தார்.

ஹேனேகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இவர் வசித்து வந்தார் எனவும், அந்த விகாரையின் காணி தொடர்பிலான பிரச்சினை காரணமாக மல்வத்துஹிரிபிட்டிய விகாரைக்கு வந்து அன்னதானம் வழங்கியமையும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நால்வர்,   தாம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் எனவும் தமக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனையிட வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் சோதனையிடுவது போன்று நடித்து  இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனப் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கலபாலுவாவே தம்மரதன தேரரின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு கார் எரியூட்டப்பட்ட நிலையில், நவகமுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.