தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு ‘மூச்சு’ திரைப்பட இயக்குநர் வாழ்த்து!
தழிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு ஈழத்தில் உருவாகிவரும் மூச்சு திரைப்படத்தின் இயக்குநர் கலைஞானி குமரநாதன் (kalaignani kumaranathan) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில்;
” கல்லூரி அதிபராக இருந்து மாணவர்களை வழிநடத்தி, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழினத்தின் உரிமைக்காக துணிச்சலாகக் குரல்கொடுத்து இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளால் வென்று தலைவராகியுள்ளமை மனமகிழ்வைத்தருகின்றது.
தமிழருக்கான நிரந்தர தீர்வினைப்பெற்றுத்தர முனைப்புடன் செயற்படும் தற்றுணிவுள்ள தகுதிமிக்க தலைவரை பல்லாண்டுகாலம் வாழவேண்டுமென வாழ்த்துவதில் எமது படக்குழுவினர் சார்பாக பெருமகிழ்வடைகின்றேன்.”என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்
கருத்துக்களேதுமில்லை