மாம்புரி கடலில் மிதந்த நிலையில் 16 பீடி இலை மூடைகள் மீட்பு!

புத்தளம், கற்பிட்டி, மாம்புரி கடற்கரை பகுதியில் கடலில் மிதந்த நிலையில் 16 பீடி இலை மூடைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத  நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கடலில் மிதந்த நிலையில் 16 மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூடைகள் சோதனையிட்ட போது அவற்றிலிருந்து 520 கிலோ 760 கிராம் நிறையுடைய பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்காரர்களால் கொண்டு வரப்பட்ட  குறித்த பீடி இலைகளானது கடற்படையினரின் நடவடிக்கை காரணமாக கரைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் கடலிலேயே கைவிட்டுள்ளதாக கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.