புதிய உண்மை ஐக்கிய நல்லிணக்க ஆணைக்குழு நம்பகத்தன்மை மிக்கதாக இலங்கையில் இல்லை! சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு

போர்க்கால மனித உரிமைமீறல்களை துஸ்பிரயோங்களை விசாரிப்பதற்கான மற்றுமொரு அமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம்முன்வைத்துள்ள சட்டமானது முன்னைய தோல்வியுற்ற முயற்சிகளைப் பிரதிபலிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் புறக்கணிப்பதாகவும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றாததாகவும் காணப்படுகின்றது  என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஆயுதமோதல்கள் முடிவிற்கு வந்த 15 வருடங்களின் பின்னரும் இலங்கை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களை  மௌனமாக்கும் ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற குறைந்தளவு கலந்தாலோசனைகளின் பின்னர் உண்மை ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் 2024 ஜனவரி முதலாம் திகதி வெளியானது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகளுடன் 1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் யுத்த குற்றங்களை விசாரணை செய்வதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

1988-89 ஆம் ஆண்டுகால பகுதியில் இடதுசாரி ஜேவிபியின் கிளர்ச்சியின் போது இடம்பெற்ற பரந்துபட்ட துஸ்பிரயோகங்களை அரசாங்கம் தவிர்த்திருந்தது எனவும் தெரிவித்துள்ள  சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உண்மை நீதி பரிகாரம் போன்றவற்றை வழங்குவதற்கு பதில் உத்தேச சட்டமூலம் போதியளவு பொறுப்புக்கூறல் இன்மை மற்றும் அநீதிகுற்றங்கள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை திசைதிருப்புவதை நோக்கமாக கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆராய்வதை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கத்துடனும் இலங்கை இந்த சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளது எனவும் சர்வதேசமனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.