இளைஞரை காணோம் ; தேடும் உறவினர்கள்!

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 27 வயது  இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் குறித்த இளைஞன் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது  இவரை எங்காவது கண்டாலோ சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது  இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான  077-2690673 அல்லது 077-6523229 அறிவிக்குமாறு  உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.