சைவப் புலவர்களுக்கு நாளை பட்டமளிப்பு விழா!

 

( காரைதீவு நிருபர் சகா)

அகில இலங்கை சைவத் தமிழ் பண்டிதர் சபையின் நான்காவது வருட சைவப்புலவர் பட்டமளிப்பு விழா நாளை(சனிக்கிழமை) மட்டக்களப்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது..

அகில இலங்கை சைவத் தமிழ் பண்டிதர் சபையின் தலைவரும், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியுமான சைவப் புலவர் பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசியர் மா. செல்வராஜா, சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.குணபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இம்முறை 19 இளம் சைவப் புலவர்களும் 01 சைவ புலவரும் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.

2017 இல் அகில இலங்கை சைவத் தமிழ் பண்டிதர் சபை மண்டூரைச் சேர்ந்த சைவப்புலவர் கல்விப் பணிப்பாளர் தில்லைநாதனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் பரீட்சைகள் நடத்தி பண்டிதர்களுக்கு சைவ புலவர் பட்டங்கள், இளம் சைவப் புலவர்கள் பட்டங்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.