திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு!

ஹஸ்பர் ஏ.எச்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது.

தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகை நிகழ்வும் இதன்போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.