ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சம்மாந்துறைக் கிளை புணரமைப்பு!

 

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்

சம்மாந்துறை பிரதேசத்தின் நகர வட்டாரத்தில் 5 ஆம் கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கிளை புனரமைப்பு கூட்டம் சிரேஸ்ட சட்டத்தரணியும், பிரதேச சபை முதன்மை வேட்பாளருமான யு.கே.சலீம் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூரும், பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதரும், பிரதி தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பையும், அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீனும்,அரசியல் அதிஉயர்பீட உறுப்பினரான ஏ.எம்.ஏ.அஸீஸூம்,முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் மற்றும் சம்மாந்துறை பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.