சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்ட களத்தில்!

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி முன்னாள் வருகைதரு விரிவுரையாளர்கள் இருவர் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளர்களாக கடமையாற்றிய நிலையில் கல்லூரிக்கு புதிதாக வந்த அதிபரால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி நேற்று திங்கட்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து தொழில்நுட்பக்கல்வி பயிற்சித் திணைக்களத்திற்கும் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.