இடை நிறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டம் அடுத்த ஆண்டு மீள அமுல்!

 

எப்.முபாரக்

இடை நிறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கானகாப்புறுதி திட்டத்தை அடுத்த ஆண்டு மீண்டும் அமுல்படுத்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என ஊடக அமைச்சின் செயலாளர் வி. பி. கே. அனுஷா பல்பிட்ட தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சால், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி பட்டறையை இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

ஊடகவியலாளர் பட்டய நிறுவனத்தை உருவாகுவதற்கு ஊடக அமைச்சு சகல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவகிறது. இது அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டாலும், ஒரு சுதந்திர ஊடக நிறுவனமாகவே அது இருக்கும். அதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது. சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டு, ஆறு மாதங்களில், அவற்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்தப் பட்டய நிறுவனத்தின் மூலம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். ஊடகவியலாளர்களின் தொழில் வாண்மை விருத்திக்கு உதவி புரியும், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப ஊடகவியலாளர்கள் மாறுவது போன்ற அனுகூலங்கள் கிடைக்கும்.

ஊடகவியலாளர்களுக்கான ஒழுக்க நெறி கோவையை, ஊடகவியலாளர்களே உருவாக்க வேண்டும். இதனை அமைச்சரோ அமைச்சோ செய்து வழங்குவது, உங்களுக்கு கௌரவமாகாது.

முழு நேர ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கும் ஊடக அமைச்சு யோசனை ஒன்றைக் கொள்கை அளவில் முன்னெடுத்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.

தங்குமிட வசதியுடன் கூடிய இரண்டுநாள் வேலைத்திட்டமாக செயற்படுத்தப்படும் இந்த பயிற்சிப்பட்டறையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 50 ஊடகவியலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
திருகோணமலை அலெக்ஸ் தோட்டம் அனந்தம ஹோட்டலில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

இந்த செயல் அமர்வின் அதிதி உரையை கிழக்கு பல்கலைக்கழக மொழி மற்றும் தொடர்பாடல் திணைக்களத் தலைவர்
கலாநிதி வ. ஜே. நவீன் ராஜ் வழங்கினார்.

குற்றவியல் அறிக்கைகள் தொடர்பான வளவாளராக சுதர்சன குணவர்த்தன, சத்துரங்க கப் ஆராய்ச்சி, என். எ. விஜய் நாயக்க ஆகியோரும் தனியுரிமை தகவல் தொடர்பான வளவாளர்களாக மந்தான இஸ்மாயில், ஜகத் லியனாரச்சி, உரேகா வெலரத்ன ஆகியோரும், அனுபவப் பகிர்வு குழுநிலை வளவாளராக மந்தான இஸ்மாயில் கே.பி. ஜெயந்த ஆகியோரும் தவறான செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சு தொடர்பான வளவாளர்களாக மஹிந்த பதிரான,
டபிள்யு.பி. செவாண்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.