தென்கிழக்கு, களனி பல்கலைகள் இடையே அறிவுசார் பரிமாற்ற நிகழ்வு!

நூருல் ஹூதா உமர்

பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் களனி பல்கலைக்கழக புவியியல் துறை மாணவர்களுக்கு ட்ரோன் கமரா பயன்பாடு மற்றும்  தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வு புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் தலைமையில் இடம்பெற்றது.

பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பஸிலின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த செயலமைவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது களனி பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீடத்தின் புவியியல் துறை தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் லால் மர்வின் தர்மசிறி அவர்களும் பேராசிரியர் ஏ.ஜி. அமரசிங்க அவர்கள்  உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின்போது சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல். பௌசுல் அமீர், கலாநிதி றபீகா அமீர்டீன் , சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச். முகம்மட் றினோஸ், விரிவுரையாளர் ஐ.எல். முகம்மட் சாஹிர், விரிவுரையாளர் ஏ.எல். ஐயூப், விரிவுரையாளர் எம்.என். நுஸ்கியா பானு, விரிவுரையாளர் எம். எச். பாத்திமா நுஸ்கியா உள்ளிட்டவர்களும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஷ்ஹர் அவர்களும் கல்விசாரா உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் பொன்னாடைகளும் போர்த்தப்பட்டன. ட்ரோன் கேமரா பயன்பாடு மற்றும்  தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு விரிவான செயல்முறை பயிற்சிகளையும் விரிவுரைகளையும் ஆற்றினர்.

களனி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் வருகையை மகிழ்விக்க தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.