கொரோனா ஒழிப்பு சார்க் நிதியத்திற்கு ஜனாதிபதி 5 மில்லியன் டொலர்கள் அன்பளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள சார்க் நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்ய உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மார்ச் 15 ஆம் திகதி சார்க் அரச தலைவர்களுக்கிடையில் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த நிதியம் தாபிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.