அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்த 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்று இரவு மாற்றப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்ற வதந்தி காரணமாக சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இருவர் உயிரிழந்தனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையை அடுத்து தமிழ் அரசியல் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு பாதுகாபுக்காக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கமைய அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 11 அரசியல் கைதிகள் முதற்கட்டமாக இன்று இரவு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.