பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது சமுர்த்தி பயனாளிகளுக்கு “சஹனபியவர” வட்டியில்லாக் கடன் வழங்கி வைப்பு!

(ஷய்பான் அப்துல்லாஹ்)

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் நாட்டில் தற்சமயம் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாவினை முற்பணமாக வழங்கும் “சஹனபியவர”வேலைத்திட்டம் தேசிய ரீதியில் நேற்று (26) சமுர்த்தி வங்கிகளினூடாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸின் அவசர நடவடிக்கையினால் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸின் ஆலோசனையின் பேரில் இந்த முற்பணக் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (26) வியாழக்கிழமை சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் கலந்து கொண்டு வங்கியின் கட்டுப்பாட்டுச்சபைத் தலைவர் ஏ.சுலைமானுக்கு கடனை வழங்கி வைத்து திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்

இந்நிகழ்வில் திட்ட முகாமையாளர் ஏ.எல்.ஏ.கபூர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.ஏ.கபூர், எம்.ஐ. அன்சார் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த முற்பணக் கடனினை விரும்புகின்ற சமுர்த்தி உதவி பெறுவோர் பெற்றுக் கொள்ள முடியும். இக்கடனுக்கு வட்டி அறவிடப்படமாட்டாது. ஆறு மாத காலம் சலுகைக் காலம் வழங்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.