சுவிஸில் இலங்கையர் ஒருவர் கொரோனாவினால் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கையார் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது.

சுவிஸில் 11 ஆயிரத்து 811 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் இவர்களில் 192 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 111 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும்  24 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் முதல் இலங்கையர் ஒருவர் வெளிநாட்டில் இந்த வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.