பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி விஜய்?

  

நடிகர் விஜய் நடிப்பில் சென்ற வருடம் பிகில் படம் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களையும் தாண்டி அது 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அந்த படம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அதில் கல்லூரி ஆசிரியராக நடித்துள்ளார் விஜய். இந்த படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக அது தள்ளிப்போய் உள்ளது. ஓரிரு மாதங்கள் கழித்து தான் மாஸ்டர் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் அடுத்து ராஜமௌலியின்  RRRபடத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என தற்போது செய்தி பரவி வருகிறது. ராஜமௌலி இயக்கி வரும் இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் RRR உருவாகிறது. தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்வதற்காக விஜய்யை ஒரு சிறிய ரோலில் நடிக்க வைக்க ராஜமௌலி முடிவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றி அதிகாரப்பூரோவா தகவல் எதுவும் வரவில்லை.

மாஸ்டர் பட ஷூட்டிங்கை முடித்துவிட்ட விஜய் அடுத்து தனது 65வது படத்திற்காக எந்த இயக்குனருடன் கூட்டணி சேர்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் அவரிடம் கதை கூறியுள்ளனர். யாரை விஜய் தேர்ந்தெடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.