ஆண்களே! உங்கள் தாடி அழகில் பெண்கள் மயங்க வேண்டுமா? அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்…!

“பெண்களுக்கு அழகு கூந்தல், ஆண்களுக்கு அழகு மீசை மற்றும் தாடி” என்பார்கள். பொதுவாக தாடி என்றால், காதல் சோகத்தில் வளர்ப்பது என்று கூட பலர் கிண்டல் அடிப்பார்கள். தற்போது ஸ்டிரிம் தாடி பரவலாக ட்ரெண்டாகியுள்ளது. திரைப்படங்கள் முதல், நிஜ வாழ்க்கை வரை எல்லா ஆண்கள் தங்கள் தாடி மீது மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். ஆனால், சிலருக்கு தாடி வளரவில்லை அல்லது தாடியை ஆரோக்கியமாக பராமரிப்பது போன்ற விஷயங்களுக்காக கவலை கொள்கிறார்கள். மேலும், சிலர் தங்கள் தாடி அழகாக தெரியவில்லை என்று கூட புலம்புவார்கள்.

தாடி வளர்ப்பது எளிதான பணி அல்ல. நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய பல்வேறு காரணிகள் மற்றும் உங்கள் தாடியைப் பராமரிக்க நீங்கள் எடுக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அத்தியாவசிய எண்ணெய்கள் உங்களின் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கின்றன. அத்தியாவசிய எண்ணெய்கள் உங்கள் தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் தாடியை அழகாக பராமரிக்க அத்தியாவசிய எண்ணெய்கள் பெரிதும் உதவுகின்றன.

பெண்கள் விரும்பும் தாடி

பொதுவாக எல்லா பெண்களுக்கும் தாடி வைத்த ஆண்களை மிகமிக பிடிக்கும். ஆண்கள் தாடி வைத்திருக்கும்போது, மிக அழகாக இருப்பார்கள். ஊடலின்போது உடலிலும், உதட்டிலும் தீண்டும் தாடியை எந்த பெண்தான் விரும்ப மாட்டார்கள். ஆண்கள் தாடியை அழகாகவும், அளவாகவும் பாராமரிப்பது மிக அவசியம். உங்களின் முக அழகை தூக்கி பிடிப்பதில் உங்கள் தாடியும் முக்கிய பங்குவகிக்கிறது. பெண்களை மயக்கும் அழகான தாடியை நீங்கள் எப்படி பெறலாம் அல்லது எவ்வாறு பராமரிக்கலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

ஜொஜோபா எண்ணெய்

ஆண்களே, உங்கள் தாடியின் வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் தாடியின் கீழும் அதைச் சுற்றியுள்ள அரிப்பு மற்றும் மெல்லிய சருமத்தையும் சமாளிக்க ஜோஜோபா எண்ணெய் ஒரு சிறந்த எண்ணெய் ஆக பயன்படுகிறது. ஜோஜோபா எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை உங்கள் தாடியின் கீழ் உள்ள சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும், உங்கள் தாடியையும் சருமத்தையும் ஈரப்பதமாக வைத்திருக்க இது ஒரு சிறந்த வழியாகும். எவ்வாறு பயன்படுத்துவது? தாடி பொடுகு போன்ற சிக்கல்களை தவிர்த்து, தாடி முடியை வலுப்படுத்தவும் ஆரோக்கியமான தாடி வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் உதவுகிறது. தாடி வளர்ச்சிக்கு ஜோஜோபா எண்ணெயில் சில துளிகள் எடுத்து உங்கள் தாடியின் அடியில் தோலில் மெதுவாக மசாஜ் செய்து உங்கள் தாடியில் பரப்பவும். ஒரு இரவு முழுவதும் வைத்திருந்துவிட்டு, தாடி ஷாம்பூவைப் பயன்படுத்தி காலையில் கழுவ வேண்டும்.

அரிசி தவிடு எண்ணெய்
அரிசி தவிடு எண்ணெயில் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஆதலால், இவை உங்கள் தாடியை மென்மையாக்கும் மற்றும் தாடி முடியை முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கும். இந்த எண்ணெயில் இருக்கும் ஃபெருலிக் அமிலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும், கார்போஹைட்ரேட் கலவை, எண்ணெயில் உள்ள இனோசிட்டால் தாடியில் ஏற்படும் பொடுகை தடுக்கிறது. இந்த எண்ணெய் உங்கள் தாடிக்கு பிரகாசத்தையும் சேர்த்து, தாடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இந்த எண்ணெயை உங்கள் தாடி மற்றும் அதன் அடியில் உள்ள தோலில் மசாஜ் செய்யவும்.

சிடார்வுட் எண்ணெய்

சிடார்வுட் எண்ணெய் தாடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் ஒரு சக்திவாய்ந்த எண்ணெய். இது வலுவான ஆண்டிசெப்டிக் மற்றும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த எண்ணெயில் சிவப்பு தோலழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால், சரும உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் இது முடி உதிர்தலைத் தடுக்கிறது மற்றும் தாடி வளர்ச்சியை அதிகரிக்கும். தவிர, தாடி பொடுகு பிரச்சினையையும் இது சரிசெய்கிறது.

வெண்ணெய் எண்ணெய்

வெண்ணெய் எண்ணெய் உங்கள் தோல் மற்றும் முடி இரண்டிற்கும் ஒரு சிறந்த பயனை தருகிறது. இது உங்கள் சருமத்தை ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. வெண்ணெய் எண்ணெயில் அமினோ அமிலங்கள் மற்றும் தாடி முடியை வளர்க்கும் புரதங்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் தாடியின் கீழும் சுற்றிலும் உள்ள நமைச்சலை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க மயிர்க்கால்களை தூண்டுகிறது.

சூரியகாந்தி எண்ணெய்

சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்திருக்கின்றன. சூரியகாந்தி எண்ணெய் தாடியை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. இந்த எண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம் மயிர்க்கால்களை புத்துயிர் பெறவைப்பதன் மூலம் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இதுதவிர, உங்கள் தாடியை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

புதினா எண்ணெய்

தாடியை அழகாக வளர்ப்பதற்கு ஒரு அற்புதமான எண்ணெய் புதினா எண்ணெய். இந்த எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்ற மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவும், ஆரோக்கியமான தாடியை பராமரிக்கவும் உதவுகின்றன. புதினா எண்ணெய் உங்கள் தலைமுடியை சுத்தப்படுத்தவும் ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்க தூண்டுகிறது. ஆதலால், இது தாடி வளர்ச்சிக்கு நல்ல பலனை தருகிறது.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய் உங்கள் தாடிக்கு ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. உங்கள் தாடியின் அடியில் சருமத்தை சுத்தப்படுத்தவும் வளர்க்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது. அது மட்டுமல்லாமல், இது தாடி பொடுகை தடுக்கிறது மற்றும் உங்கள் தாடியை மென்மையாக்குகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.