உலர் உணவு விநியோகம்: பிரதேச செயலகங்களிடம்

சமுர்த்திப் பயனாளிகளுக்குரிய உலர் உணவுப் பொதிகளுக்குரிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாமையால், அந்தப் பணிகளை ஒவ்வொரு பிரதேச செயலகங்களையும் முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
76 ஆயிரம் சமுர்த்திப் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. அவர்களுக்கு 1, 500 ரூபா, 2 ஆயிரத்து 500 ரூபா, 3 ஆயிரத்து 500 ரூபா பொதிகள் வழங்கப்பட இருந்தன. அரிசி, மா, சீனி, பருப்பு, ரின் மீன் என்று பல்வேறு பொருட்கள் அதில் அடங்கியிருந்தன. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக இதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது. அரசின் நிர்ணய விலையில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களிடமோ, தனியாரிடமோ அதனைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனையடுத்து ஒவ்வொரு பிரதேச செயலகங்களும், தத்தமது பகுதியிலுள்ள தனியார் அல்லது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களிடம் நியாய விலையில் பொருள்களைப் பெற்று விநியோகிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் வழங்கப்படும் பொருள்கள் மற்றும் அதன் அளவுகள் வெவ்வேறாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.