இந்தியாவிலிருந்து நாடு திரும்பியோர் உடன் தனிமைப்படுத்தலில் ஈடுபடுக! – அரசு அவசர கோரிக்கை

இந்தியாவிலிருந்து இம்மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்பிய அனைவரையும் உடனடியாகத் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அரசு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிலிருந்து இம்மாதம் 15 ஆம் திகதி நாடு திரும்பிய கண்டி, அக்குரணையைச் சேர்ந்த ஒருவர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் இந்தியாவில் இருந்து வந்தது தொடர்பில் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு முன்னர் அறிவிக்கவில்லை என்றும், தனிமைப்படுத்தலில் ஈடுபடவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து இம்மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்பிய அனைவரும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.