ஹொரவபொத்தானையில் உள்ள பள்ளிவாசல்களை மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவித்தல்!

ஹொரவபொத்தான பிரதேசத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரவபொத்தான பெரிய பள்ளிவாசலினால் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் நாட்டின் தற்போது நிலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தான பெரிய பள்ளிவாசலின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.