பரவை முனியம்மா பாட்டியின் இந்த ஒரு விசயம் உங்களுக்கு தெரியுமா?

சினிமா நடிகையும், பாடகியும், நாட்டுப்புற கலைஞருமான பரவை முனியம்மா இன்று அதிகாலை 3 மணியளவில் மதுரையில் உள்ள அவரின் வீட்டில் காலமாகிவிட்டார்.

இது நாட்டுப்புற கலைஞர்களையும், சினிமா வட்டாரத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரையின் சமையலுக்கு மற்ற ஊர் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பும் ரசனையும் உண்டு. அதற்கு ஏற்றார் போல பறவை முனியம்மாவும் அசத்தி காட்டினார்.

சன் டிவியில் வந்த கிராமத்து விருந்து நிகழ்ச்சியில் அவர் அசைவ உணவு சமைத்து காட்டி மக்களை மிகவும் கவர்ந்தார்.

மேலும் இதன் முத்தாய்ப்பாக அவர் சமைக்கும் உணவுக்கு ஏற்றார் போல அவர் தன் சொந்த முயற்சியில் எழுதிய பாடலை பாடி அசத்துவது தான் ஹைலைட்.

இந்த நிகழ்ச்சியால் அவருக்கு பெண் ரசிகைகளும் ஏராளம்.

இப்படியானவர் நம்மிடம் இல்லை என்னும் போது மன வலி பலருக்கும் இருக்கத்தானே செய்யும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.