சமூர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரண நிதி!

சமூர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இரண்டு தவணைககளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

20 லட்சம் சமூர்த்தி பயனாளிகள் இதன் மூலம் நன்மையடைவார்கள் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

10 லட்சத்திற்கும் குறைவான வங்கிக் கடன் பெற்ற அரச பணியாளர்களின் மாதந்த கடன் அறவீடுகளை ஏப்ரல் மே மாதங்களில் அறவிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.