ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்கள் அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றன – ஜனாதிபதி செயலகம்!

மக்களின் வாழ்க்கையை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று(திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வுசெய்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவு செய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல் என்பவை அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது.

ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தில் மாற்றம் செய்ய தேவையான தகவல்கள் இருப்பின் அந்த அனைத்து தகவல்களையும் கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.