கொரோனா தொற்று சந்தேகத்தில் 3 மாத குழந்தை உட்பட மூவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனதாக சந்தேகிக்கப்படும் மூன்று மாத குழந்தை உட்பட மூன்று பேர் சிலாபம் பொது வைத்தியலையில் இருந்து அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மொத்த எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் 117 பேர் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 29 பேர் கொழும்பிலும் களுத்துறையில் 18 பேரும் புத்தளத்தில் 15 பேரும் கம்பஹாவில் 10 பேரும் இரத்தினபுரியில் 03 பேரும் குருநாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, யாழ்ப்பாணம் மாத்தறை, கண்டியில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.