நான்கு மாத குழந்தை உட்பட குடும்பத்தவர் ஐவருக்கு கொரோனா தொற்று

சிலாபத்தில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

சிலாபத்தை சேர்ந்த குடும்பத்தினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

பரிசோதனையின் முடிவில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மேலும் இருவருக்கு தொற்று இருப்பது கண்டறியபட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது. அதன்படி, 14 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.