8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் சிறிய தந்தையின் பாலியல் துஷ்பிரயோகத்தினால் 8 மாத கர்ப்பணியாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி, சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அவர்கள் குறித்த சிறுமியின் வீட்டை முற்றுகையிட்டு சிறுமியை மீட்டுள்ளனர்.

கொழும்பில் இருக்கும் சிறிய தந்தையின் வீட்டிற்கு தாயாருடன் சிறுமி கடந்த 8 மாதத்திற்கு முன்னர் சென்ற நிலையில் அங்கு சிறிய தந்தையார் அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இதன்காரணமாக கர்ப்பணியான நிலையில் வீட்டில் சிறுமியை ஒழித்துவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறிய தந்தையை கொழும்பில் கைதுசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.