கொரோனா வைரஸ் – தற்காலிகமாக மூடப்பட்டது சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம்!
சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பேச்சாளர் ருவந்தி பெல்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றியவர்கள் சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை