வீட்டின் முன்பக்கம் ரோஜா செடி வளர்க்கலாமா? ஏன் வைக்கக்கூடாது?… தெரிஞ்சிக்கோங்க…

வீட்டில் தோட்டங்கள் வைத்துப் பராமரிப்பதும் அவ்வளவு இடம் இல்லாவிட்டால் சின்ன சின்ன தொட்டிச் செடிகளையாவது வைத்து அதில் மலரும் பூக்களைப் பார்த்து ரசிக்க யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால் நாம் செய்யும் தவறே எந்த செடியை எப்படி பராமரிக்க வேண்டும்,எந்த வகை செடியை வீட்டின் எந்த பகுதியில் வைத்து வளர்க்க வேண்டும் என்று தெரியாமல் வளர்க்கிறோம்.

பப்பாளியும் கறிவேப்பிலையும்

நிறைய வீட்டில் பப்பாளி மரம் இருக்கும். அதற்குப் பெரிதாகப் பராமரிப்பு இல்லாமலே நிறைய பழங்களைத் தரும் என்றும், பப்பாளி மிக எளிதாக கிடைக்கக் கூடிய பழம் என்பதாலும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். இதுவே கறிவேப்பிலை மரம் என்றால் யாரையும் தொட விட மாட்டார்கள். ஆனால் எளிதில் பூச்சிகள் பரவ ஆரம்பித்துவிடும். பப்பாளியையும் கறிவேப்பிலையையும் மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும். பப்பாளி மரத்தைப் பெண்ணாகவும் கறிவேப்பிலையை ஆண்களாகவும் பாவிக்கும் பழக்கம் நம் முன்னோர்களிடையே உண்டு.

முட்கள் கொண்ட செடிகள்

முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. அதனால் தான் நம்முடைய வீடுகளில் முன்னோர்கள் வாசல் பகுதியில் மல்லியை, முல்லை போன்ற மென்மையான, நல்ல நறுமணம் வீசக்கூடிய செடிகளை வாயிலில் பந்தல் தோரணங்களாக வளர்த்தார்கள். ஆனால் ஹைபிரிடு செடிகளுக்கு மாறிவிட்ட நாம் வீட்டின் வாயிலில் முட்களுடன் இருக்கிற வண்ண வண்ண ரோஜாச் செடிகளை வாங்கி வளர்த்துக் கொண்டிருக்கிறோம். ரோஜாவும் நல்ல அழகாக பூத்துக் குலுங்கும் மலர் தானே அதை வீட்டில் வளர்க்கக் கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். தாராளமாக ரோஜாவை நீங்கள் வளர்க்ககலாம். ஆனால் வாசலுக்கு நேராகவோ வீட்டின் முன் பகுதியிலோ வளர்க்காதீர்கள். பக்கச் சுவர்களில் தொட்டியிலோ அல்லது மாடிப்படி, மாடிகளில் வைத்து வளர்த்துக் கொள்ளலாம்.

தோஷம் நீக்கும் செடிகள்

ஒரு காலத்தில் வீட்டுக்கு முன்பாக முல்லை, மல்லி, ஜாதிமுல்லை ஆகியவற்றை வளர்த்தது வெறுமனே அழகுக்கோ அல்லது வாசனைக்காகவோ மட்டுமல்ல, முல்லை, மல்லி, ஜாதிமுல்லை, பாதிரி மலர், தும்பை, பாரிஜாதம், சாமந்தி போன்ற மலர்கள் விநாயகருக்கு மிகவும் உகந்தவை. இவற்றை வீட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். அப்படி வளர்ப்பதால் வீட்டில் ஏதேனும் மனை தோஷங்கள் இருந்தால் கூட சரியாகும்.

தென்னை மரம்

தனியாக ஒற்றைத் தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது. தென்னை மரத்தை தனித்து வளர்க்காமல் மற்றொரு கன்றோடு சேர்த்து தான் வளர்க்க வேண்டும். அதனால் தான் தென்னையை தென்னம்பிள்ளை என்று அழைக்கிறோம்.

வேப்ப மரம்

வேப்பமரம் சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறது. நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால் அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம், ஆரோக்கியம் கெட்டு விடும். அதனால் வீட்டில் வேம்பு இருந்தால் நல்லது தான். அதை ஒருபோதும் வெட்டாதீர்கள்.

வாழைமரம்

வாழை மரம் வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. அது சந்ததியை வாழையடி வாழை போல தழைக்கச் செய்யும் என்பார்கள். ஆனால் அதற்காக ஒற்றை வாழை மரத்தை வைத்திருக்கக் கூடாது. குறைந்த பட்சம் அதன் துணையாக சிறு குருத்தாவது அருகில் நட வேண்டும். அல்லது அதிலேயே குருத்து முளைத்து வருவதும் நல்லது தான். துணை இல்லாத அல்லது மறு கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது. அதனால் அதை வெட்டவும் கூடாது.

பனை

இப்போது ரியல் எஸ்டேட்டில் மனை வாங்கி வீடு கட்டுகிறோம். பெரும்பாலும் ஊரின் ஓரங்களில் மனை வாங்குகின்ற பொழுது, அந்த இடத்திலோ அதற்கு அருகிலோ ஒற்றைப் பனைமரம் ஏதேனும் இருக்கிறதா இல்லை இருந்து வெட்டப்பட்டதா என்பதை கவனித்து அந்த இடத்தை வாங்க வேண்டும். ஏனென்றால் ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட கூடாது. அது குடும்ப விருத்திக்கு ஆகாது.

முருங்கையும் மாமரமும்

வீட்டின் வாசலுக்கு நேராக, குறிப்பாக நிலக்கதவிற்கு நேர் எதிராக முருங்கை மரமோ மா மரமோ இருக்ககக்கூடாது. நீங்கள் வீட்டு வாசலில் அல்லது நிலகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது. அது துர்பாக்கியத்தைத் தரும்.

கழிவுகள்

நீங்கள் அசைவ உணவு சாப்பிடுகிறவர்களாக இருந்தால், வீட்டில் அசைவ உணவுகள் சமைக்கும் போது, இறைச்சியை சுத்தப்படுத்தும் தண்ணீர், அசைவக் கழிவுகள், சாப்பிட்ட பின் கை கழுவும் பாத்திரம் கழுவும் தண்ணீர் மற்றும் மனிதக் கழிவு தேக்கம், பழைய துணிகள், குப்பைகள் போன்றவற்றை வாசலில் தேங்குதல், போட்டு வைப்பது கூடாது. அது உங்கள் வீட்டுக்கு துரதிஷ்டத்தை உண்டாக்கும்.

அம்மன் அருள் கொண்ட செடிகள்

உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாகக் குடி கொண்டு இருக்க வேண்டுமென்றால், சந்தன முல்லை, பெருமாளின் அருள் கொண்ட துளசி, பவள மல்லிகைச் செடி, திருநீற்றுப் பச்சிலை செடி (பல மருத்துவ குணமும் கொண்டது), கற்பூரவள்ளி ஆகிய தெய்வீகத் தன்மையும் வாசனையும் கொண்ட செடிகளை வீட்டில் வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால் அந்த வாசனையைத் தாண்டி வெளியே போக மனமில்லாமல் உங்கள் வீட்டில் எப்போதும் மகால்சுமி குடி கொண்டிருப்பாள் என்பது ஐதீகம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.