ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

சமீபத்தில் பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகில் 90 சதவீத ஆண்கள் போதிய விந்தணு உற்பத்தி இல்லாததால், ஆண்கள் மலட்டு தன்மை பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். இப்படி போதிய விந்தணு உற்பத்தி இல்லாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை உண்ணும் உணவுகளும், வாழ்க்கை முறையும் தான். அதுமட்டுமின்றி, தற்போது ஆண்கள் அதிக வேலைப்பளுவின் காரணமாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதுவும் ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தும். உங்களுக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடக்க ஆரம்பித்தால், அப்போது கெட்ட பழக்கங்களை விட்டு, அப்போது உண்ணும் உணவிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தால், விந்தணுவின் உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.

அதிலும் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து வந்தால், திருமணத்திற்கு பின் குழந்தை பெற முயற்சிக்கும் போது, எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. சரி, இப்போது விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும், விலை குறைவில் கிடைக்கும் சில உணவுப் பொருட்களைப் பார்ப்போம்.

 

டார்க் சாக்லெட்

ஆம், டார்க் சாக்லெட் சாப்பிட்டால் விந்தணுவின் உற்பத்தி அதிகரிக்கும். ஏனெனில் அதில் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. எனவே அவ்வப்போது டார்க் சாக்லெட் சாப்பிட்டு வாருங்கள்.

 

வாழைப்பழம்

வாழைப்பாத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ப்ரோமெலைன் என்னும் நொதி நிறைந்துள்ளது. இவை ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். எனவே தினமும் ஆண்கள் வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

 

வால்நட்ஸ்

வால்நட்ஸில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் பல்வேறு வகையான புற்றுநோயை தடுப்பதில் இருந்து, விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வரை பல நன்மைகள் அடங்கியுள்ளது. ஏனென்றால் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இவை விந்தணுவின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும், தரமானதாகவும் வைத்துக் கொள்ளும்.

 

பூண்டு

பூண்டுகளில் அல்லிசின் என்னும் பொருள் உள்ளது. இவை பாலுறுப்புகளுக்கு இரத்தத்தின் ஓட்டத்தை அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். எனவே ஆண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் பூண்டு சேர்த்து வருவது மிகவும் நல்லது.

 

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலில் நோய்களின் தாக்கத்தை குறைப்பதுடன், விந்தணுவின் உற்பத்தியையும் குறைக்கும்.

 

கடல் சிப்பி

கடல் சிப்பியில் விந்தணுவின் உற்பத்திக்கு வேண்டிய அத்தியாவசிய அமினோ ஆசிட்டுகள், ஜிங்க் நிறைந்துள்ளது. ஆகவே ஆண்கள் இதனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வருவது விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும்.

 

அவகேடோ

அவகேடோவில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தால், அவை விந்தணுவின் உற்பத்தி மற்றும் இயக்கத்தை அதிகரித்து, வலிமையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

 

மாட்டிறைச்சி

தோல் நீக்கப்பட்ட மாட்டிறைச்சியில் ஜிங்க் அதிகம் நிறைந்துள்து. எனவே ஆண்கள் இதனை மாட்டிறைச்சியை அவ்வப்போது சேர்த்து வந்தால், விந்தணுவின் அளவு அதிகரிப்பதுடன், பாலுணர்ச்சியும் சற்று தூண்டப்படும்.

 

மாதுளை

மாதுளையை சூப்பர் ஃபுட் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்தத்தில் உள்ள கெமிக்கலை குறைக்கும். இந்த கெமிக்கலானது விந்தணுவை அழிக்கும் திறன் கொண்டது. எனவே மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், விந்தணு அழிவதைத் தடுக்கலாம். இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.