அல்பேர்ட்டாவில் மேலும் ஒருவர் மரணம் – 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

அல்பேர்ட்டாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்ததோடு 64 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது மாகாணத்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை ஒன்பது ஆகவும், நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 754 ஆகவும் உயர்த்தியுள்ளது என்றும் இதில் 77 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த கொரோனா தோற்றாளர்களில் எழுபத்தைந்து மாகாணத்திற்குள் கண்டறியப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது என மருத்துவர் தீனா ஹின்ஷா கூறியுள்ளார்.

அதன்பிரகாரம் கல்கரி 453 பேர் எட்மண்டன் 187 பேர், மத்திய மாகாணத்தில் 51 பேர், வடக்கில் 50, தெற்கில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.