கொரோனா நோயாளர்களை அடையாளம் காணும் PCR பரிசோதனை இயந்திரங்கள் கையளிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனை இயந்திரங்கள் இரண்டு கையளிக்கப்பட்டுள்ளன.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த பரிசோதனை இயந்திரம் இலங்கை மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அதிகார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிசோதனை இயந்திரங்களின் பெறுமதி 23 மில்லியன் ரூபாயாகும்.

இதன்மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானோரை விரைவில் அடையாளங்காணும் நடவடிக்கையை இலகுவாக முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.