கிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடுகள்!

கிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஓய்வூதியம் பெறும் ஆயிரத்து 210 பேர் இராணுவத்தினரால் பேருந்துகளில் இன்று வங்கிகளுக்கு அழைத்துவரப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

கிராமங்களிலிருந்து அரச பேருந்துகளில் ஓய்வூதியர்கள் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள வங்கிகளுக்கு அழைத்துவரப்பட்டு மாதாந்த ஒய்வூதியத்தை பெறுவதற்கு ஏற்பாடுகள் படையினரின் ஒழுங்குபடுத்தலில் மேற்கொள்ளப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கம் முகமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது வெளியில் செல்லமுடியாத நிலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டுடன் வயோதிபர்கள் மாதாந்த ஒய்வூதியம் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.