அனைத்து புலனாய்வு முகவர்களும் தயார் நிலையில்!

இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இராணுவப் புலனாய்வினர் உட்பட நாட்டின் அனைத்து புலனாய்வு முகவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“தீவிரவாத மற்றும் பயங்கரவாதம் என்பன மீண்டும் ஒன்றுசேர்வது உட்பட நாடு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்கும் வகையில் தயார்நிலையில் இருக்கின்றது.

இதற்காகப் பாதுகாப்புப் படையினர் முழுமை ஆயத்தங்களுடன் நாடளாவிய ரீதியில் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முப்படையினரும் பொலிஸாரும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.