10,039 பேர் கைது! – ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரிடம் சிக்கினர்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 10 ஆயிரத்து 39 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 489 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.