2019ல் தமிழில் வெளியான கில்மா (A) படங்கள்.. மிஸ் பண்ணாம பார்த்துருங்க
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஏ படங்கள் மிகவும் அரிது. ஆனால் சமீபகாலமாக இரட்டை அர்த்த படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்ததால் கடந்த வருடத்தில் அதிகப்படியான ஏ படங்கள் வந்துள்ளன. கிளாமர் மட்டுமின்றி வன்முறை காட்சிகளுக்கு கூட ஏ சர்டிபிகேட் தான் கொடுப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆடை
படத்தின் பெயர்தான் ஆடை. ஆனால் இந்த படத்தில் அமலாபால் ஆடையே இல்லாமல் வந்ததால் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்தனர். படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை.
ஒங்கள போடணும் சார்
டைட்டிலே தெரிகிறது இது ஒரு அடல்ட் படம் என்று. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே மாதிரி வந்த படங்களில் இதுவும் ஒன்று. அளவுக்கதிகமான கவர்ச்சிகள் மட்டும் இரட்டை அர்த்த வசனங்களால் இந்தப்படம் ஏ சர்டிபிகேட் பெற்றது
90ml
இந்த படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். பெண் சுதந்தரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய இந்த படத்தில் பெண் சுதந்திரத்தை சொல்வதற்கு பதிலாக பெண்களின் காம உணர்வுகளை அதிகமாகப் பேசிய படம்.
ஆதித்ய வர்மா
விக்ரம் மகன் துருவ் விக்ரமின் முதல் படமே ஏ சர்டிபிகேட் பெற்றது. அர்ஜுன் ரெட்டி தெலுங்கு ரீமேக்கில் இருந்து உருவாக்கப்பட்ட ஆதித்யா வர்மா படம் பாலியல் உணர்வுகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டது.
கேங்ஸ் ஆப் மெட்ராஸ்
அதிக அளவு வன்முறை காட்சிகளைக் கொண்ட திரைப்படமாக உருவாகி இருந்த கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படம் ஏ சர்டிபிகேட் பெற்றது. இந்த படம் வந்தது கூட நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சூப்பர் டீலக்ஸ்
விஜய் சேதுபதியின் திருநங்கை கதாபாத்திரம் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று அவரையும் இந்திய அளவில் பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது. இருந்தாலும் படத்தின் கதைக்கரு மற்றும் காட்சிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை