அஜித், ஷங்கர் கூட்டணியில் ட்ராப் ஆன படம் எது தெரியுமா? இது மட்டும் நடந்திருந்தால் அஜித் அப்பவே சூப்பர் ஸ்டார்

விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றி பெற்றவர்கள் என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம். அப்படி கண்கூட அந்த வார்த்தையை உண்மையாகியவர்தான் தல அஜித்.

பல தோல்வி படங்களை கொடுத்தாலும் விடா முயற்சியால் தற்போது தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

அதற்கு ஒரு வகையில் அவரது ரசிகர்களும் காரணம் தான். அஜித் தோல்வி படங்களை கொடுத்து வந்த போதிலும் தொடர்ந்து கை கொடுத்து தூக்கி விட்டார்கள். ஆனால் அந்த ரசிகர்களுக்கு இதுவரை ஏன் அஜித் சங்கர் இருவரும் இணைந்து படம் பண்ண வில்லை என்ற வருத்தம் இருந்து வருகிறது.

தல அஜித், ஷங்கர் இணையும் படம் ஒன்று ஜீன்ஸ் படத்தின் போதே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஏ எம் ரத்னத்துக்கும் அஜித்துக்கும் ஏற்பட்ட சின்ன கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படம் டிராப் ஆனது.

அது மட்டும் நடந்திருந்தால் தல அஜித் அப்போதே முன்னணி நடிகராக மாறி இருப்பார் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது. ஆனால் தற்போது இருக்கும் மார்க்கெட்டுக்கு சங்கர் மற்றும் அஜித் இருவரும் இணைந்தால் அந்த படம் வேற லெவல் தான்.

அஜித், எம் ரத்தினத்துடன் ஏற்பட்ட சண்டை எல்லாம் மறந்து மீண்டும் அவருக்காக படம் பண்ணினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.