முகநூல் செய்தியால் மூளாய் மக்களுக்கு புலம்பெயர் தேசத்தவர் நிவாரண உதவி!

”எதுவித உதவியும் இன்றித் தவிக்கும் யாழ்.மூளாய் கிராமசேவகர் பிரிவு J/171 மக்கள்” என்ற செய்தியை முகநூலில் அறிந்த எமது தேசத்தின்மீதும் – எமது மக்கள் மீதும் – அதீத பற்றுக்கொண்ட யாழ்.இந்துவின் 2008 உயர்தர மாணவனும் புலம்பெயர் தேசத்தில் வசிப்பவருமாகிய விந்தகன் என்பவர் ஒருதொகைப் பணத்தை அன்பளிப்பாக வழங்கி அந்த மக்களுக்கு உதவிவழங்குமாறு கோரியிருந்தார்.

 வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஸன் இந்த பணியை ஒழுங்கமைத்து அந்தப் பிரதேச கிராமசேவகர் ஊடாக 30 பயனாளிகளைத் தெரிவுசெய்து நிவாரணப் பொருள்களை வழங்கிவைக்க ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த பொதிகளை வருமான வரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஸன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என். இணையத்தள ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.