ஒருநாள் சம்பளத்தை கொரோனா ஒழிப்பிற்கு நன்கொடையாக வழங்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்!

ஒரு நாள் சம்பளத்தை கொரோனா ஒழிப்பிற்கான தேசிய நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று(சனிக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவிருந்த தமது தொழிற்சங்க நடவடிக்கையையும் தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இதுவரை வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருந்தது.

எனினும், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.