கொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் இதுவரை 166 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் 29 பேர் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு தற்போது கொரோனா வைரஸ் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 259 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று எந்த நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.