‘நாம் மீண்டும் சந்திப்போம்’ – 68 ஆண்டுகளில் ஐந்தாவது உரை நிகழ்த்தினார் எலிசபெத் மகாராணி!

நாட்டு மக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வர முடியும் என பிரித்தானிய மகாராணி எலிசபெத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவது பாரிய பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் பிரித்தானியா பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக பிரித்தானிய முடிக்குரிய மகாராணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரை நிகழ்த்தினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “தேசமெங்கும் வியாபித்திருந்த இரண்டாம் உலகப்போர் நெருக்கடி நிலையின் போது செயற்பட்டது போல இப்போது நாட்டு மக்கள் உறுதியுடன் செயற்பட்டால் கொரோனா பாதிப்புக்களில் இருந்து மீண்டு வரமுடியும்.

மேலும், குறித்த உரையின் போது நாட்டு மக்கள் அனைவரும் தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்து வந்த தங்களது பொறுமை மற்றும் உறுதியினை மீண்டும் வெளிக்காட்டுவதற்கு மகாராணி அழைப்பு விடுத்தார்.

அத்துடன், ‘நாம் மீண்டும் சந்திப்போம்’ எனக் குறிப்பிட்ட எலிசபெத் மகாராணி, 19404ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர் சூழ்நிலையில் வெளிவந்த “Better days will return.” எனும் பாடலையும் சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், “நம் அனைவரும் ஒன்றாக இந்நோயினைக் கையாள்கிறோம். நான் மீண்டும் உறுதியாகச் சொல்கிறேன் தொடர்ச்சியாக நாம் ஒற்றுமையாகவும் திடமாகவும் பயணித்தால் நாம் இதனை வெல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.

“நாம் ஏற்கனவே சவால்களை சமாளித்திருந்தாலும் குறித்த விடயமானது மிகவும் வித்தியாசமானது. உலக மக்கள் அனைவரையும் குணப்படுத்தும் ஓர் பொது முயற்சிக்காக விஞ்ஞானத்தின் முன்னேற்றங்களோடு, இம்முறை உலகளாவிய அனைத்து நாடுகளுடனும் நாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம். நாம் வெற்றி பெறுவோம் என்பதுடன் குறித்த வெற்றி நம் அனைவரையும் சாரும்” என அவர் தெரிவித்துள்ளார்.

எலிசபெத் மகாராணியின் குறித்த உரையானது அவரது 68 ஆண்டுகால ஆட்சி காலத்தில் ஐந்து தடவைகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்ட உரைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.