8 மணி நேர நீர் வெட்டு அமுல்

இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணி காரணமாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 09, 14 அதாவது தெமட்டகொடை, கிராண்ட்பாஸ், நவகம்புரவில் 2 மணி முதல் இரவு 10.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப் பகுதியில் மோதறை, மட்டக்குளி  பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.