மன உளைச்சலில் இருக்கும் அஜித்.. கண்கலங்க உண்மையான காரணம் இதுதான்

தல அஜித்துக்கு தமிழகத்தில் இருக்கும் மாஸ் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்.

தற்போது தல அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர் மிகப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் தல அஜித் சென்னை வர முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத்திலேயே தங்கிவிட்டார்.

உலகமே கொரானா பிரச்சனையில் பலவிதமான மன உளைச்சலை சந்தித்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் தல அஜித் வீட்டிலும் அவரது தந்தை உடல்நலம் முடியாமல் இருக்கிறார் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தல ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர். மேலும் தல அஜித்தின் அப்பா விரைவில் குணமடைய சாமியை வேண்டி வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.