மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மறைந்திருந்த கொரோனாத் தொற்றாளர்! – 4 வைத்தியர்கள் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தல்

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காகத் தகவல்களை மறைத்து சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு, ஒருகொடவத்தைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் அங்கிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் 4 வைத்தியர்கள் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வசந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.