பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடமிருந்து 6 கோடி ரூபாய் அன்பளிப்பு
பாதுகாப்பு அமைச்சின் கீழ் சேவையில் உள்ள ஆயிரத்து 200 பேர் தன்னார்வமாக அன்பளிப்பு செய்த ஒரு கோடி ரூபாய் நிதியை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவிடம் கையளித்தார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விசேட நிதியத்திலிருந்து 05 கோடி ரூபாயினை பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன கொவிட் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தார்.
நேற்று பிற்பகலாகும் போது கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 420 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும்.
சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.
0112354479, 011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை