இனப்படுகொலையால் தமிழர்களை அழித்தது போன்று கொரோனாவை அழிக்கமுடியாது! பா.அரியதேத்திரன் மு.பா.உ.

விடுதலைப்புலிகளை இலங்கையில் இருந்து மௌனிக்க 30, வருடம் எடுத்தது அப்படியானால் விமல் வீரவன்ஷவின் கருத்துப்படி இலங்கையில் இருந்து கொரோனா வைரஷை கட்டுப்படுத்த இன்னும் முப்பது வருடம் தேவை என்பதை விமல்வீரவன்ச ஏற்றுக்கொள்கிறாரா?
இலங்கையின் இனப்படுகொலை செய்து தமிழர்களை அழித்ததுபோல் வைரஷ் கிருமிகளை அழிக்கமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

விமல் வீரவன்ச போன்றவர்கள் புலிகளை அழித்த எமக்கு கொரோனா வைரஷு அழிப்பது பெரியவேலையா? என கூறியது தொடர்பாக ஊடகவியலாளர் கேடலடபோது மேலும் கூறுகையில்.

விடுதலைபுலிகளை மௌனிப்பதற்கு இலங்கைக்கு துணையாக உதவிய சுமார் இருபது நாடுகளுக்கு மேல் இன்று கொரோனா வைரஷ் நோயை இல்லாமல் செய்ய முடியாமல் திண்டாடுகிறார்கள். உலகில் பல அரசியல் தலைவர்களே தாங்களுடைய அறிவுத்திறனை கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஏங்கித்தவிக்கிறார்கள்.

இந்நிலையில் விடுதலைபுலிகளை அழித்ததாக கூறி பெருமைப்படும் விமல் வீரவன்ச போன்ற இனவாத அரசியல் தலைவரகள் ஒன்றை உணர்ந்து கொள்ளவேண்டும் விடுதலைப்புலிகளின் போராட்டம் இலங்கையில் சுமார் 30, வருடங்கள் இடம்பெற்றது அப்படியானால் கொரோனா வைரஷ் இலங்கையில் இருந்து மௌனிக்க 30, வருடம் தேவைப்படும் அல்லவா?

அதைவிட விடுதலைப்புலிகள் மௌனத்திற்கு இலங்கைக்கு தோள்கொடுத்த அமரிக்கா இந்தியா சீனா போன்ற வல்லரசு அத்தனை நாடுகளும் இன்று ஊரடங்கு சட்டத்தை மட்டும் போட்டு இதுவரை அதற்கான எந்த ஒரு மருந்தையும் கண்டுபிடிக்காமல் திண்டாடும் நிலை உள்ளதை விமல் வீரவன்ச போன்றவர்கள் உணரவேண்டும். எதற்கு எடுத்தாலும் புலிக்கதை பேசி போக்கணம் கெட்ட அரசியல் செய்வதை கைவிடவேண்டும்.

இனப்பிரச்சனைக்கான விடுதலைபோராட்டத்தை, இனப்படுகொலைசெய்து அடக்கிவிட்டு பெருமைபேசும் சிங்கள இனவாத தலைவர்கள் ஒரு தொற்றுநோயுடன் இனப்பிச்சனை விடயத்தை ஒப்பிட்டு பேசும் மிக மோஷமான கூழ்த்ரமான ஒரு நாடு என்றால் அது இலங்கை மட்டுமாகத்தான் இருக்கும் . இனப்படுகொலைசெய்வதை போன்று கொரோனா வைரஷ் நோயை படுகொலை செய்ய முடியாது என்பதை இலங்கை ஆட்சியில் உள்ள இனவாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.

சுகாதாரப்பணியாளர்கள், வைத்தியர்கள், பாதுகாப்பு தரப்பினர், அரச நிறுவனங்கள், ஊடகங்கள் என பலதரப்பட்டோர் இரவு பகலாக அற்பணிப்புடன் இந்த நோயை இல்லாமல் செய்ய சேவையாற்றுவதை நாம் பாராட்டவேண்டும் அவர்களுக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதில் வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் அனைவரும் அக்கறையுடன் செயல்படுகினரறனர். ஆனால் சில புல்லுரிவிகள் இக்கட்டான இந்த நேரத்திலும் இனவாத கருத்துக்களை கூறி அவர்களின் சுய ரூபத்தை காட்டுகின்றனர்.

தற்போதய நிலையில் அரசியல் வாதப்பிரதிவாதங்களும் இனவாத கருத்துக்களும் கூறி மக்களை ஏமாற்றும் காலமல்ல நாட்டில் ஏற்பட்ட மிக மோஷமான வைரஷ் நோயை கட்டுப்படுத்த கட்சிமேதம் இனவாதம் தமிழன் சிங்களவன் முஷ்லிம் என்ற பேதங்களை மறந்து ஒற்றுமையாக செயல்படவேண்டும் எனவும் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.