உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருந்து தவறிழைத்துவிட்டது- ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொரோனா தொற்று விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை இரத்துச் செய்யப்போவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் குறித்து பல தகவல்கள் முன்னரே வெளியானாலும் அவற்றை எல்லாம் உலக சுகாதார நிறுவனம் அலட்சியப்படுத்தி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

அத்துடன், சீனா மீது பயணத் தடை விதிக்க வேண்டும் என தாம் கூறிய போது அதை ஏற்காமல் உலக சுகாதார நிறுவனம் பெரிய தவறிழைத்து விட்டது என ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ட்ரம்பின் குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்ரொஸ் அதனொம் கெப்ரேயிசஸ் (Tedros Adhanom Ghebreyesus) மறுத்துள்ளதுடன், சர்வதேச அமைப்பான உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பொம்மையாக மாறிவிட்டது என ட்ரம்ப் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.