தமிழரசுக் கட்சியால் மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையினரால் மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
உலகம் பூராகவும் கொரோனா நோயின் தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், தாயகப் பகுதியில் அவசரகால நிலைமையில் வறுமையை மக்கள் அன்றாடம் எதிர்கொண்டுவரும் நிலையில், தமிழரசு கட்சியினரால், மாற்றுத் திறனாளிகளிக் தேனீ அமைப்பினரிடம் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 500 பேருக்கான உலர் உணவுப் பொதிகள் நேற்று (புதன்கிழமை) வழங்கப்பட்டுள்ளன.
இந்த உணவுப் பொதிகள் மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
கருத்துக்களேதுமில்லை